Thursday, July 7, 2011

என்னுலகம் !!!

               என்னுலகம் !!!

எனக்கென்று ஓருலகம்
நாளை உருவாகும்- அங்கே
நான்சொல்லும் சொல்லொன்றே
உயிரின் கருவாகும்- அங்கே
எந்தன்மனம் அன்பினால்
அடர்ந்த தருவாகும்- அன்று
எந்தன்பெயர் ஒன்றுமட்டும்
அவ்வுலகின் குருவாகும்

இழிந்தோர்கள் மேலுள்ள
கவர்ச்சியலை ஓயும்- என்னை
எதிர்ப்போர்கள் தலைகளெல்லாம்
இம்மண்ணில் சாயும்- நாளை
என்சொல்லே உலகமெங்கும்
வெள்ளமெனப் பாயும்- என்பேர்
சொன்னாலே பயந்தோடும்- தீய
மனிதனென்னும் நாயும்...

இன்பத்தையனுபவிக்கும் இயல்பான

நிலைமையிலே நானில்லை- என்
தாகம்தீர்த்திட ஒவ்வொருமலராய்
தேடிப்பார்த்தும் தேனில்லை- என்
சோகம்தீர்த்திடக் கொள்கைஜெயித்திட
இன்னுமின்னும் ஏனில்லை?- என்
முயற்சிஎன்னும் வாளெடுத்து முன்னின்றால்
என்பிறப்பு இம்மண்ணில் வீணில்லை

ஓர்நாள் என்சொல்லே

எந்நாட்டின் வேதமாகும்- என்
பாட்டொன்றே இவ்வுலகின்
தேசிய கீதமாகும்- அன்று
தீயோர்கள் ஓடிவந்துப்
பணிவதெந்தன் பாதமாகும்- இதெல்லாம்
நடக்கவைக்க என்னசெய்வேன்
என்பதென்மனதின் வாதமாகும்...

ஆதரவற்றப் பிள்ளைகளெல்லாம்

என்னுடைய ஜாதி- என்
சாதனைவாழ்வில் அவர்களுக்கெல்லாம்
சரிசமமானப் பாதி- நாட்டில்
சிலபேர்மட்டும் சிறப்பாய்வாழ
பலர் வீழ்வதென்ன நீதி- இந்நிலை
ஓர்நாள்மாறும் அன்றைக்குதானே
இந்நாட்டில் ஆனந்தஜோதி!!!!


                                                                                        -ஆனந்தன்

No comments:

Post a Comment