Wednesday, July 6, 2011

தலைவன் வருவான்

                      தலைவன் வருவான் 

 அறிவிலேத் தெளிவு 
அகந்தையற்ற பணிவு 
கருத்திலே உறுதி 
கனல்கொண்டக் குருதி
நெஞ்சிலே ஈரம் 
நிகரற்ற வீரம்
கலைகளில் களிப்பு
களைப்பற்ற உழைப்பு
வாலிபத்தின் வலிமை
வாழ்க்கையிலே எளிமை
விழிகளிலே நெருப்பு - போகும்
வழிமுழுதும் சிறப்பு
அரசாலும் திறமை - மக்கள்
மனசாளும் பெருமை 
மலையொத்த தன்மானம் - கடல்
அலையொத்தப் போராட்டம்
நேர்மைக்கிவன் வேந்தன் - புத்திக்
கூர்மைமிகு காந்தன்
தன்னலத்தைத் தவிர்த்த - தாய் 
மண் நலத்தில் லயித்த 
மன்னவனும் வருவான் - மன
நிம்மதியைத் தருவான்
வருவான் வருவான்
விரைவாக - உங்கள்
வாழ்க்கை ஆகிடும்
நிறைவாக!!!

                                                                             -ஆனந்தன்

1 comment:

  1. nitchayamaaga varuvaan kavignare!!! nam thalaivan....

    ReplyDelete