புதுக்கவிதைகள்
காலச்சக்கரத்தின்
பாதச்சுவடுகளில்
புதையுண்டுப் போகின்ற
புதிரான மாயை
வாலிபம்
புதையுண்டுப் போகின்ற
பூத உடலுக்கு
இயற்கை அளிக்கின்ற
இன்பக்கேளிக்கை
காதல்
கள்ளமில்லா உள்ளங்களின்
இனிய இடமாற்றம்
வண்ணமிகு எண்ணங்களின்
வாசனைப் பரிமாற்றம்
வாழ்ந்தடங்கும் மானுடத்தின்
வாலிபக் கொண்டாட்டம்
மனித ஜென்மத்திற்கு-இயற்கையின்
மகத்தான நன்கொடை
காதல்
கற்பனை உணர்வில்
இளைஞரை மயக்கி
அற்பனைப்போல
அலையவைத்து
தர்ப்பணை செய்யும்
இம்மண்ணிற்கு
விற்பனை பொருளாய்
ஆனது காதல்
-ஆனந்தன்

No comments:
Post a Comment