ஒருமித்தக் கருத்துள்ள
உள்ளங்கள் சேர்ந்தால்
உருவாகும் மாற்றங்கள்
உலகத்தை மாற்றும்
இரும்பொத்த இளைஞர்கள்
இணைகின்ற நாள்தான்
இணையற்ற இந்நாட்டை
இமயத்திலேற்றும்
அனுதினம் தோன்றும்
சூரிய உதயம்-அதன்
அனல்கதிர் யாவிலும்
அபார வீரியம்-உன்
பார்வையுமதுபோல்
இருந்திட வேண்டும்-உன்
பாதையில் உலகம்
நடந்திட வேண்டும்
உலகியல் தந்த
உளவியல் பாடம்
உலகினில் வாழ
உறுதுணையாகும்
மனநிலையாவும்
மகத்துவம் பெற்றால்
மனிதரின் வாழ்வில்
மகுடங்களேறும்
ஆயக்கலைகள்
அனைத்துங்கற்றும்-மனித
நேயமுடனே
வாழ்வினை வாழ்ந்தும்-இந்த
மாயுலகில்
பணமில்லைஎன்றால்-தெரு
நாயது வாழ்வும்
நம்வாழ்வு மொன்றாம்
வயதின் வலிமையை
வாழ்க்கையில் செலுத்தினால்
வாழ்க்கை வளமாகும்
வணங்காமல் பெண்
சேர்க்கையில் செலுத்தினால்
வாழ்க்கைக்கே வலமாகும்
நீ மறைந்த பின்னும்
உந்தன் புகழை
மண்ணில் விடவேண்டும்-நீ
இறந்தசெய்தி
கேட்டு வுலகே
துன்பப்பட வேண்டும்
இந்தியாவின் இனியமகன்
இறந்ததை எண்ணி
இயற்கைகூட
இயன்றவரை
இன்னல் படவேண்டும்-இவை
அனைத்தையும் அறிந்தால்
உன் பிணம்கூட-சந்
தோஷப்படவேண்டும்-சந்
தோஷப்படவேண்டும்...
-ஆனந்தன்

No comments:
Post a Comment