நான்!!!
கிணற்றினில் விழுந்திடும்
நிலவின் நிழலை
தன்போலெண்ணி
நகைத்திடும் தவளை-ஆனால்
நிலவின் புகழை
அறியாதத் தவளை-நீரில்
ஆடுதேயென்று அடையுமாம் கவலை...
என் வாழ்க்கை இப்போது
நிலவைப்போல!-என்
சுற்றத்தார் நினைப்பெல்லாம்
தவளைப்போல!!!
யுகங்கள்மாறி போனால்கூட
எனககுயில்லை மரணம்-என்
உணர்வுகள் வென்றால்
இயற்கையும்கூட
என்னிடம் அடையும் சரணம்-நான்
கட்டளையிட்டால் கடவுளும்கூட
சட்டென என்முன் வரணும்-மனித
மனங்களைத் திருத்திடும்
மனங்களைத் திருத்திடும்
வரங்களைக் கேட்பேன்-உடனே
என்னிடம் தரனும்...
உலகில் எதையும் செய்வான்
பசிப்பவன்
நானந்தப் பசியைக்கூட
ரசிப்பவன்...
வானத்துக் கதிரோடு
வசிப்பவன்-நான்
ஞானத்தை உணவாகப்
புசிப்பவன்...
நாதியற்றோர் வாழ்க்கைக்கும்
நான்பிறந்த நாட்டிற்கும்
என்னாலேப் பெருமைகள்
நாளை வந்துசேரும்-உலக
சரித்திரத்தின் ஒவ்வோரேடும்
என்பெயரைக் கூறும்...
ஆடிவரும் தேரும்
அடங்கிடாதப் போரும்
ஆலமர வேரும்-அதன்
அடியிலுள்ள நீரும்
என்பேர் கேட்டால்
அடங்கிவிடும் பாரும்...
வீசுகின்ற காற்றும் நான்-அதனுடன்
பேசுகின்ற நாற்றும் நான்
தேனிலுள்ள இனிப்பும் நான்
தெய்வீக நெருப்பும் நான்
வெறிபிடித்த வேங்கை நான்
கரையுடைத்த கங்கை நான்
சுற்றித்திரியும் பறவை நான்
வெறுப்பேன் தீயோர் உறவை நான்
உலையினில் கொதிக்கும் இரும்பும் நான்
கொடியினில் பூக்கும் அரும்பும் நான்
மழலையர்கூறும் மொழியும் நான்-இம்
மானிட இனத்தின் விழியும் நான்
உயர்ந்துநிற்கும் மழையும் நான்
கடலிலுள்ள அலையும் நான்
பாலைவனத்தின் மணலும் நான்
மாலைக்கதிரின் அனலும் நான்
கலைஞர்கள் உண்ணும் உணவும் நான்
இளைஞர்கள் எண்ணும் கனவும் நான்
யானையின் பலமாம் தும்பிக்கை நான்
நாளைய உலகின் நம்பிக்கை நான்
இரவைக்கொல்லும் பகலும் நான்
இறங்கும் இடியின் நகலும் நான்
உறுதியின் மொத்த உருவம் நான்-இவ்
உலகினையொத்த துருவம் நான்
இதயம் நிறைக்கும் இசையும் நான்
இறைவனிருக்கும் திசையும் நான்
இலக்கையடையும் விசையும் நான்
இளையோருடம்பின் தசையும் நான்
உழைப்போர் வியர்வைத்துளியும் நான்-தீங்
கிழைப்போர் அஞ்சும் ஒளியும் நான்
தாவரம் கொண்டப் பச்சையம் நான்-இச்
சகத்தினை வெல்வேன் நிச்சயம் நான்
பொக்ரான்குண்டின் திறனும் நான்
பூமிப்பந்தின் அரணும் நான்
நல்லோர்க்கென்றும் காவலும் நான்
பொல்லார்க்கெல்லாம் காலனும் நான்!!!!!
-ஆனந்தன்

No comments:
Post a Comment