Friday, March 18, 2011

சமுதாயச் சீர்கேடு

                   சமுதாயச் சீர்கேடு 
                   

நம் நாட்டின் முன்னோர்கள் எல்லோரும் கூண்டோடு -நமக்கு         விடுதலையைப் பெற்றிடவே பட்டார்கள் பெரும்பாடு
இந்நாளில் எல்லோரும் இன்புற்று வாழ்ந்திருக்க இங்கே
எப்போது பற்றியது சமுதாயச் சீர்கேடு....

அரசாங்க அலுவல்கள் அனைத்திலுமே லஞ்சம் -நீர்

அணைக்கட்டு அமைத்தாலும் அதில்கூட லஞ்சம்-ஓர்
ஆதாரமில்லாமல் அயல்நாடு சென்றால் அதற்கு
சேதாரம் சிலநூறு தருவார்கள் லஞ்சம்....

சிந்தித்து வாழ்வோரை நிந்திக்கும் உலகம்-இங்கே
பந்திக்கு மட்டும்தான் முந்திடுவோரதிகம்-தினமும்
சந்திக்கும் சிலபேரில் சரிபாதி மிருகம்-இந்த
சீர்கேட்டைக் கலைந்திட்டால் சரியாகும் கலகம்

ஊழல்களில்லாத ஒருகட்சி உண்டா?-மண்ணில்

உழுதுண்டு வாழ்ந்திடவும் தண்ணீர்ருமுண்டா?
கல்லாதோரில்லாத மாவட்டமுண்டா?-பொய்
சொல்லாதத் தலைவர்தான் நம்நாட்டில் உண்டா?...

நல்லோர்க்குப் பரிசிங்கே துப்பாக்கி குண்டு-பணம்

உள்ளோர்க்கு இடையினிலும் முடிவார்கள் சிண்டு
இந்நாட்டின் இளரத்தம் இதையெல்லாம் கண்டு-பொங்கி
எழுந்திட்டால் புதுவாழ்வு எல்லோர்க்கும் உண்டு....

சாராயம்என்கின்ற பேராறு ஓடும்-வரையில்
எவ்வாறு சீராகும் நம்தாயின் நாடும்-தினம்
போராடும் குணமுள்ள இளைஞர்கள் கூடும்-நாளன்று
போதைப் பேயதுவும் நாட்டை விட்டு ஓடும்...

வருமான வரியினையும் கட்டுவதில்லை-திருட்டுப்
பொருள்மீது வரும் மோகம் விட்டதுமில்லை
ஜாதிக்கொரு கட்சிக்கொரு பட்டியலில்லை-அந்தப்
பட்டியலை வெட்டிவிட்டால் விட்டதுத் தொல்லை....

தலைவனொருவன் சிறைக்குச் சென்றால்-உடனே

சாராயம் வந்திடும் தொண்டருக்கேன்றே
சாலையில் மரங்கள் தரையினில் சாயும்-தீய
வேலைகள் செய்தேக் கரங்களும் ஓயும்....

நம்மில் சிலபேர் செய்யும் தவறால்

நாட்டின் ஏற்றம் கெடுகிறது-தன்
வீட்டின் ஏற்றம் ஒன்றே பெரிதாய்
நினைப்பவாராலும் கெடுகிறது -நம்
 

தாய்த்திரு நாட்டின் சீர்கேட்டினையே
கவிதைநடையில் வர்ணித்தால்
அனலில் இட்டப் புழுவைப்போல
எந்தன் நெஞ்சம் சுடுகிறது....

இந்த நிலைகள் இனிமேல் மாறி-இதுவரை

வந்தக் கலைகளை உடனே வாறி-யானைத்
தந்த உறுதியை மனதினில் ஏற்றி-அனைவரும்
சொந்தமாகவே அடைவோம் வெற்றி!!!

 

                                                                                                                                      
                                         "உணர்வருவி"ஆனந்தன்

No comments:

Post a Comment