Monday, May 9, 2011

அவன் என் நண்பன் !!!

அவன் என் நண்பன் !!!
எங்கோ
எவள் கழுத்திலேயோ
தாலி ஏறும்போதெல்லாம்
எவனோ ஒருவனுடைய
இதயம்
இறந்து போய்க்கொண்டுதான்
இருக்கிறது...

நிராகரிக்கப் பட்டதன்
நரக வேதனையோடு
அவன்!
நிழல் கிடைத்துவிட்ட
நிம்மதியில்
அவள்!

அவனுக்கு அவளின்
மணமும் தெரியாது...
மனமும் புரியாது...
குணமும் தெரியாது
குலமும் தெரியாது...

தெரிந்தது
ஒன்று மட்டுமே!
அவள்
வசதியில் பெரியவள்...
அவனோ
வயிற்றுக்கே வறியவன்...
பாவம்!
வறுமைக்கு உரியவன்!..

அவனுக்கு

கடவுள் உட்பட
எதன்மீதும்
நம்பிக்கையில்லை..
 

உறவினர்கள் நண்பர்கள்-ஏன்
தன்மீதே நம்பிக்கை
கொண்டவனில்லை...

அவன்
கடவுளெனக்கொண்டது
காலத்தை மட்டுமே...
இறைவனென ஏற்றது
இயற்கையை மட்டுமே...
முழுதாய் நம்பியது
இவற்றை மட்டுமே...
ஆனால் இன்று அவனுக்கு
இவற்றின் மீதும்
நம்பிக்கை நசிந்தது...

கரிக்குமென்று தெரிந்திருந்தும்
 
கடல்நீரைப் பருகிவிட்டு
கடலைக் கடிந்துகொண்டால்
இவனை என்னசொல்ல?.. 

வெற்றிகளைக் கண்டவனோ
வீரனாகலாம்- வாழ்வில்
தோல்விகளைத் வென்றவனே 
தேவனாகலாம்

ஆனால் இவனோ
தோல்விகளைத் தின்றவன்..
மென்றுத் துப்பியவன்...
தேவாதி தேவன்!!!

பின்பு இந்தத்தோல்வி
எதற்காம்?
முன்பு கண்ட தோல்விகளால்- தன்
முயற்சிகளில் மாற்றம் செய்தான்..

இன்று வந்தத் தோல்வியொன்றால்  - தானே
இறைவனென உணர்ந்துக்கொண்டான்...

சில திரைப்படங்களில்
இந்தக்காட்சி வரும்
வில்லனிடம்
லஞ்சம் வாங்கிக்கொண்டு
கதாநாயகியைக்
காதலிப்பதாய் நடித்து 
அவளின்
பிரிவுக்குப் பின்புதான்
உணர்ந்து உருகுவான்
நேசம் நடிப்பல்ல
நிஜமேயென்று!!!

இங்கேயிவன்
லஞ்சம் பெற்றது
யாரிடம்?
தன்னிடமே!..
ஆம்

தன்னையும்- தன்
படைப்புகளையும்
பதப்படுத்திப்
பக்குவப்படுத்த
இபபடியொருத்  தோல்வி
தேவைப்பட்டதாம்
இவனுக்கு!..

எவனால்
கூற இயலும்
இப்படியொருக் காரணத்தை
இவனைத் தவிர!

அவளை ஒருபோதும்-தன்
வாழ்க்கைத் துணையாய்
வரித்துப் பார்த்ததில்லை- அவளின்
கரங்களைப் பற்றிக்கொண்டு
கண்டங்களைச் சுற்றிவர
கணப்பொழுதும்
ஆசைப்பட்டதில்லை...

இவ்வளவு ஏன்?
அவளிடம் அவன்
ஒரு வார்த்தைகூடப்
பேசியதில்லை...

ஏனென்றுக் கேட்டால்
தெரியவில்லையாம்!
தோன்றவில்லையாம்!
மீறி கேட்டால்
தேவையில்லையாம்!

அவனைக் கடக்கின்ற
போதெல்லாம்
அவள் பார்த்த
கனிந்தப் பார்வைகளுக்
கென்ன பொருள்?

அவள் கடந்துபோனதும்
அவன் இதயம்
கரைந்து போனதே!
களிப்பில் ஆழ்ந்ததே!
கடகடத்ததே!
இதற்கெல்லாம்
என்ன பொருள்?..

பின்பொருநாள்- அவளின்
திருமணத்தேதி கேட்டு
திடுக்கிட்டு திகைத்தான்
சித்தன்போல் நகைதான்
தொலைந்தது துன்பமென்றான்- இனி
விளைந்தது இன்பமென்றான்...

என்ன ஜென்மமிவன்
என்று எண்ணிக்கொண்டே
கண்கள் அசந்துவிட்டேன்
கனவுலகம் சென்றுவிட்டேன்...

பின்னர் என்
செவிப்புலத்தில்- ஏதோ
புலம்பல் மொழிகேட்டு
கண்விழித்துப் பார்க்கின்றேன்
கனவா? இது நனவா?

நாய்களழும் நள்ளிரவில்- கவிதை
நாயகனும் அழுகின்றான்
ஆணவத்திற் கரசனவன்
அழுகையிலே அமிழ்கின்றான்...

முதலைக் கண்ணீர்
என்றாலிதை
முற்றும் உண்மையாகாது! - தன்
மனதை வென்றப்
பொருள் மாற்றான்
கரங்கள் சேர்ந்ததைக்
கண்டாலே - ஓர்
மழலை அழுமே
அதுபோலே
இருந்தது நண்பன்
அழுகையுமே!...

ஆறுதல் அவனுக்குத்
தேவையில்லை- அவன்
ஆதங்கம் தீர்ந்தால்
போதுமென
அமைதியாகப்
படுத்துவிட்டேன்- இனி
அவனை வெல்ல
யாருமில்லை!!!!!


                                                                -ஆனந்தன்





No comments:

Post a Comment