உடையணிந்த உயிரினங்கள்ஆகஸ்ட் என்பதினை
ஆகத்து எனத்திருத்தி
தமிழின் தரத்தைத்
தாங்கிப் பிடிப்போரே...
ஆங்கிலத்தில் அமைந்ததுப்போல்
அன்னைத்தமிழ் நாட்டினிலும்
பனிரெண்டு மாதமுண்டு
அதைமதிப்போர்
எத்தனைப்பேர் மீதமுண்டு...
ஜனவரி சனவரியாம்
ஜூன் ஜூலை சூன் சூலையாம்
டிசம்பர் திசம்பராம்
ஏனிந்த வெளிவேடம்
எதற்கிந்த பலிபீடம்
ஆங்கில வார்த்தைகேன்
தமிழால் அலங்காரம்-இங்கே
அலங்காரமும் அவமானமும்
ஒன்றாகும் காரணத்தால்
அன்னைத் தமிழழகை
அவமானப் படுத்தாதீர்
பின்பற்ற இயலாதெனினும்
புண்படுத்திப் பார்க்காதீர்....
ஓர் நாட்டைப்பிடித்திட வேண்டுமெனில்
அணுகுண்டு ரகங்கள் தேவையில்லை-அங்குப்
பேசுகின்ற மொழியினையும்
பேணும்கலாச் சாரத்தையும்
சாகடிக்கும் சதிச்செயலைத்
தூண்டிவிட்டால் போதும்-நாடு
நாசமாகிப் போகும்....
பாதிக்குமேலிங்கே
பாதித்துப் போச்சி
மீதியும் பாழாகும்
நாளுங்கள் ஆட்சி...
ஆங்கிலேயப் படைகளுக்கு
அச்சமினி வேண்டாம்-உங்களைத்
துரத்துமெண்ணம் கொண்டவர்கள்
யாருமிங்கு இல்லை
நீங்களாக வந்தால்தான்
எதிப்புகணைத் தொடுப்போம்-இன்னும்
கொஞ்சகாலம் பொறுத்திருங்கள்-நாட்டை
எழுதிக்கையில் கொடுப்போம்...
வரப்புச் சண்டைஎனில்-எதிர்
தரப்பை அழித்திடுவோம்
வேலிப் பிரச்னையில்-சகோதரியாயினும்
தாலியறுத்திடுவோம்
எதிரிஎன்று எவனும்வந்தால்
எமனைப்போல முழங்கிடுவோம்
ஆங்கிலேயர்களே! அமெரிக்கர்களே!-எதிர்காலத்தில்
எங்கள்நாட்டைத் தங்களுக்குத்
தாரைவார்த்து வழங்கிடுவோம்...
ஆங்கிலமே இனிஎங்கள்
தாய்மொழியாய் மாறும்...
அம்மொழியை அறியாதோரை-எம்மினம்
நாய்கள் எனக்கூறும்...
படித்தவன் என்றால் இனி இங்கே
ஆங்கிலம் அறிந்தவன் மட்டும்தான்-எங்கள்
ஆங்கில அன்னையின் முன்னாலே-உங்கள்
அன்னைத்தமிழினி மட்டம்தான்...
கைநிறையக் காசுபணம்
கொடுத்தால் போதும்
தாய்மொழியும் தாய்மண்ணும்
தரிசாய்ப் போகும்-இந்தப்
பேரரக்கக் கூட்டமதை
பூமியில் வைத்தால்
வேரறுத்துப் பூமிப்பந்தை
சீர்குலைத்திடும்...
நாகரிகமென்ற பேரில்
நாட்டையழிக்கிறார்-நாட்டின்கண்கள்போன்ற பெண்கள்கூட-இதில்
மாட்டியழிகிறார்
ஆண்களுக்கு நிகரெனவே
வாழ்வது நன்று-ஒழுக்கத்தில்
ஆண்களையும் மிஞ்சிப் பெண்மை
தாழ்ந்ததுஇன்று.....
அந்நியமொழிகள் ஆயிரத்தை
அறிந்திடலொன்றும் தவறில்லை...
புண்ணியமொழியாம் நம்தமிழில்
புலவராயிருக்கவும் தேவையில்லை-தமிழை
தவறின்றி எழுதவும் பிழையின்றிப் படிக்கவும் -நீ
அறிந்திருந்தாலே மகிழ்வெனக்கு...
அதுவும் இயலாதென்றால் புழுவே!-உனைப்
புதைக்கவுமிங்கே இடமிருக்கு...
இந்நிலைஇங்கே எப்போதுமாறும்-இதுகள்
தன்னிலைஇங்கே எப்போது உணரும்
முன்னிலை நல்லோர் யாரும்நின்றால்
பொன்னிலை இங்கேப் புதிதாய் புலரும்.
-ஆனந்தன்
ஏனையக் கவிதைகளுக்கு
www.naanananthan.webs.com
No comments:
Post a Comment